Wednesday, 2 April 2014

என் கவிதைகள் - 1 (My poems - 1)



முகநூலில் நண்பர் பதித்த இப்புகைப்படதைப் பார்த்தவுடன் புதிதாக அமைக்கப்பட்ட இரும்பேணிகள் அச்சூழலுடன் ஒவ்வாமல் இருப்பதாகப் பட்டது. அதை நினைத்தவாறு எனக்குத் தோன்றிய வரிகளை எழுதினேன். இதோ இங்கே:



பலநூறு ஆண்டு முன்னர் ராசராசன் கட்டிவைத்த
அழகான கோவிலொன்று அழியாமல் நிற்கக் கண்டேன்.

 
வானுயர்ந்த கோபுரமும் நுட்பமான சிற்பங்களும்

காணப்பெற்ற களிப்பினிலே வாய்பிளந்து வியந்து நின்றேன்.

 
பால் வெள்ளைத் தாளொன்றில் கரும்புள்ளி இட்டதுபோல்
அமைந்திருந்த மாற்றங்கள் கண்டுமனம் வெதும்பி நின்றேன்.

 
ராசராசன் இருந்திருந்தால் கண்ணீர்விட் டழுதிருப்பான்
அறிவற்றோர் செயல்கண்டு கற்சிலைபோல் நின்றிருப்பான்.




 (இடம்: தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில், தஞ்சாவூர்; புகைப்படத்தை எடுத்தவர்: குழந்தைஆனந்த் கணேசன் )